கரூர், ஆக. 27: குண்டும் குழியுமாக உள்ள கொங்கு நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் வெள்ளியணை சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு பகுதிக்கு எதிரே கொங்கு நகர், லிங்கத்தூர் போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை செல்கிறது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆரம்பத்தில் தார்ச்சாலையாக இருந்த இந்த சாலை தொடர் வாகன போக்குவரத்து காரணமாக சிதிலடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் எனவும் அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை செப்பனிட தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.