மதுரை, ஜூன் 25: தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளதாவது; மதுரை மாவட்ட விவசாயிகள் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களை பெறுவதற்கு, தங்கள் நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அதனால், ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும், அரசின் திட்டங்களை விவசாயிகள் குறித்த நேரத்தில் பெறும் வகையில் அனைத்து விபரங்களையும் மின்னனு முறையில் சேகரிக்க, தமிழகத்தில் வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது விவசாயிகள் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், அலைபேசி எண், நில விபரங்கள் உள்ளிட்ட விபரங்களை இணைக்கும் பணி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வரும் விவசாயிகள் கட்டாயமாக தங்கள் நில உடைமை விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.