பெரியகுளம், ஆக. 25: நிலவில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து பெரியகுளத்தில் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பெரியகுளம் வடகரை பகுதியில் சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குவது மக்கள் பார்க்கும் வகையில் சமூக ஆர்வலர்கள் சாலையோரத்தில் திரையிட்டு அதை காண்பித்துக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரை இறங்கியதை தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் இனிப்பு வழங்கி தேசியக்கொடியுடன் ெகாண்டாடினர். நிலவின் தென் துருவத்தில் கால் பதித்ததை இந்தியா முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், பெரியகுளத்தில் பாமர மக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.