நாகர்கோவில், ஆக.29: நிலவில் சந்திரயான் -3 இறங்கியதை பாராட்டி பாஜ சார்பில் பிரதமருக்கு இ-போஸ்ட் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. சந்திரயான் -3 நிலவில் இறங்கியதை பாராட்டி பா.ஜனதா சார்பில் பிரதமருக்கு இ போஸ்ட் அனுப்பும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தலைமையில் பா.ஜ.வினர் பிரதமருக்கு இ-போஸ்ட் அனுப்பினர். இதில் பா.ஜ மாவட்ட பொருளாளர் முத்துராமன், மகளிர் அணி மாநில தலைவர் உமாரதி ராஜன், மாநகரத் தலைவர் ராஜன், கவுன்சிலர் ரோஸிட்டா திருமால், பா.ஜ தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சந்திரசேகர் மற்றும் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிலவில் இறங்கிய சந்திரயான்- 3 பா.ஜ சார்பில் பிரதமரை பாராட்டி இ- போஸ்ட்
previous post