Tuesday, February 27, 2024
Home » நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு

நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு

by Karthik Yash

காரிமங்கலம், டிச.28: காரிமங்கலம் அருகே, நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரிமங்கலம் அடுத்த அடிலம் பஞ்சாயத்து ஏ.சப்பாணிப்பட்டி கிராமத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட நொடித்தோர் சொத்து ஆட்சியர் நீதிமன்ற உத்தரவுப்படி, சுமார் 75 சென்ட் நிலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரரிடம் ஒப்படைப்பது குறித்து, சம்மந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய்துறையினர் நேற்று ஈடுபட்டனர். சர்வேயர் குமரவேல், விஏஓ மோகன்குமார் மற்றும் வருவாய் துறையினர் நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், எதிர்ப்பு தெரிவித்தவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். இதயைடுத்து அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

12 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi