ராஜபாளையம், ஜூலை 5: ராஜபாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து நிலத்தரகர்கள் நலச் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்கள் நிலத்தரகர்கள் நல சங்கம் சார்பில் அரசு வழிகாட்டி மதிப்பை விட 30 சதவீதம் அதிகமாக எவ்வித அரசாணை இல்லாமல் நடப்பு சார்பு பதிவாளர் கூடுதலாக பணம் வாங்கியதாகவும், மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாநில அமைப்பு செயலாளர் அயப்பன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜான் கென்னடி, மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் முப்புடாதி, தொகுதி தலைவர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.