நிலக்கோட்டை, செப். 1: நிலக்கோட்டை அருகே முசுவனூத்துவில் உள்ள அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ், முன்னாள் மாணவர் காசிமாயன், ஆசிரியை பயிற்றுனர் மேற்பார்வையாளர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செந்தில்குமரன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் ஆசிரியர்கள் மணிகண்டன், ராஜகுமாரி மற்றும் முன்னாள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அரசு பள்ளிகளில் மாணவ- மாணவியர்களுக்கு வழங்கும் கல்வியின் தரம், சலுகைகள் குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியர் சிவகாமி நன்றி கூறினார்.