நிலக்கோட்டை, ஆக. 17: நிலக்கோட்டை ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் மட்டப்பாறை, ராமராஜபுரம், பள்ளபட்டி, விளாம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மாவதி தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகேந்திரன், மகேந்திரன் முன்னிலை வகித்தனர், ஊராட்சி செயலர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இம்முகாமில் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தாசில்தார் தனுஷ்கோடி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிளவராஜா, பழனியம்மாள் இளம்பரிதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை, ஒன்றிய துணை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகு, காளிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.