நிலக்கோட்டை, ஆக. 20: நிலக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டூர் ஊராட்சியில் தமிழக அரசு உத்தரவுப்படி குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு இல்லா பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகாலபாண்டியன் தலைமை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
ஊராட்சி செயலர் பாண்டியராஜன் வரவேற்றார். விழாவில் ஊராட்சிக்குட்பட்ட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் வகையில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் துணை தலைவர் கீதா, வார்டு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், ஜோதி, ஜேசுதாஸ், மரியஅருள்சாமி, மேரி, சின்ராசு, தங்கராஜ், ரம்யா மற்றும் அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.