நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் போதுராசன் தலைமை வகித்தார். மைய மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சுதந்திரம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொறுப்பாளர்கள் தமிழ்வாணன், ஜான் கிரிஸ்டோபர், கனி மனோகரன், முற்போக்கு மாணவரணி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இக்கூட்டத்தில் வரும் ஜூன் 14ல் திருச்சியில் நடைபெறும் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் பேரணிக்கு நிலக்கோட்டையிலிருந்து 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வதென தீர்மானம் நிறைவேற்றினர். இதில் நிர்வாகிகள் ஜான் கென்னடி, காளிமுத்து, கண்ணன், சில்லாரி, ராமகிருஷ்ணன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.