மல்லசமுத்திரம், அக்.26: மல்லசமுத்திரத்தில் ₹45 ஆயிரத்திற்கு நிலக்கடலை ஏலம் போனது. அதே போல் ₹7 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மல்லசமுத்திரம் கிளையில், நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 மூட்டை நிலக்கடலையை, விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், பட்டாணி ஈரப்பதம் நிலக்கடலை 60 கிலோ ₹2,090 முதல் ₹2330 வரை என மொத்தம் ₹45 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதே போல், மல்லசமுத்திரம் கிளையில் நடந்த பருத்தி ஏலத்தில் சுரபி ரகம் குவிண்டாலுக்கு ₹6199 முதல் ₹7165 வரையும், பி.டி.,ரகம் ₹6069 முதல் ₹7105 வரையும், கொட்டு பருத்தி ₹3,609 முதல் ₹5000 வரை என மொத்தம் ₹7 லட்சத்திற்கு ஏலம் போனது.