திருப்பூர், செப். 7: திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட் டீ பின்னலாடை வடிவமைப்பு கல்லூரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. கற்றுத்தந்த கல்வியை நன்றியுடன் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு செலுத்தினர். ஒரு ஆசிரியருக்கு பெருமையே அந்த மாணவன் எந்த அளவிற்கு தன்னிடம் இருந்து அறிவை பெற்றுக்கொண்டான் என்பதை பார்த்து, பூரித்துப்போவது தான் அவற்றை நிரூபிக்கும் விதமாக மாணவர்களின் செயல்கள் இருந்தது.நாள்தோறும் ஆசிரியர்களை அமர்த்தி மாணவர்கள் தனது கற்றலை மேம்படுத்தி இத்தனை நாட்களாக புகுத்திய அறிவு ஆற்றலை வெளிக்கொண்டு வந்தனர். அனைவரும் பாராட்டும் வகையில் மாணவர்கள் பாடம் நடத்தும் விதம் அமைந்தது.