குளித்தலை ஆக. 7: குளித்தலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒன்று முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டு பயிற்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடம்பர் கோவில், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இனுங்கூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. வகுப்பறை மேலாண்மை பெற்றோர் பங்கெடுப்பு தலைப்பில் ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். கருத்தாளர் மாயனூர் டயட் விரிவுரையாளர் வானதி பார்வையிட்டார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராகு காலம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். குளித்தலை வட்டாரத்தில் உள்ள ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஏராளமானோர் ஒரு கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.