விளாத்திகுளம்,செப்.3: தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை வருகைதரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக விளாத்திகுளத்தில் திமுக நிர்வாகிகளுடன் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை வருகைதரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று தகுதியானவர்களுக்கு பொற்கிழி வழங்க உள்ளார். இதையடுத்து இதுதொடர்பாக விளாத்திகுளம் தொகுதியில் உள்ள திமுக முன்னோடிகளை தேர்வுசெய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர்கள் (மேற்கு) அன்புராஜன், (மத்திய) ராமசுப்பு (கிழக்கு) சின்னமாரிமுத்து, புதூர் ஒன்றியச் செயலாளர்கள் (மத்திய) ராதாகிருஷ்ணன் (கிழக்கு) செல்வராஜ்,(மேற்கு) மும்மூர்த்தி, (ஓட்டப்பிடாரம் கிழக்கு) காசிவிஸ்வநாதன், (கோவில்பட்டி) கிழக்கு நவநீதக்கண்ணன்,பேரூர் கழக செயலாளர்கள் (விளாத்திகுளம்) வேலுச்சாமி, (எட்டையாபுரம்) பாரதிகண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் என விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.