சிவகங்கை, ஜூன் 13: சிவகங்கைகலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேஷன் நுகர்வோர் சிறப்பு முகாம் நாளை, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், செல் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை இம்முகாமில் தெரிவிக்கலாம். இதில் குடும்ப அட்டை தாரர்கள் கலந்து கொண்டு ரேஷன் விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
0