விருதுநகர், செப்.15: விருதுநகர் மின்வாரிய செயற்பொறியாளர் பாபு வெளியிட்ட தகவல்: விருதுநகர் துணை மின்நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் விருதுநுகர் நகர் பகுதி, பழைய பஸ் நிலையம், மேற்கு ரத வீதி, பாத்திமாநகர், முத்துராமலிங்கநகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி, எல்ஐஜி காலனி, கல்லூரி சாலை, குல்லூர் சந்தை, பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ்.நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்ஜிஓ நகர், வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி, முத்துராமன்பட்டி, பாண்டியன்நகரில் உள்ள முத்தால் நகரின் ஒருபகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என் நகர், சத்தியசாயி நகர், பேராலி ரோடு பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
அதேபோல் துலுக்கப்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துலுக்கப்பட்டி, ஆர்.ஆர்.நகர் முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், வாய்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி மில் குடியிருப்பு தென்பகுதி, ஒண்டிப்புலிநாயக்கனூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.