தஞ்சாவூர், அக். 17: மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை (அக்.18) நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், வல்லம் கிழக்கில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை (அக். 18) நடைபெற உள்ளது. 18 வயது வரை உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகள், மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தேசிய அடையாள அட்டை, யுடிஐடி அட்டை பதிவு செய்தல், முதலமைச்சரின் காப்பீடு திட்ட பதிவு தேவைப்படும் உபகரணங்களுக்கான மருத்துவர்களின் பரிந்துரை, அறுவை சிகிச்சைக்கான மருத்துவர்களின் பரிந்துரை ஆகிய பயன்களை கட்டணமின்றி எளிதாக பெற்றுக் கொள்ளலாம். எனவே இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.