சிவகங்கை, ஆக.21: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை எஸ்.புதூர், மானாமதுரை, திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட குறிப்பிட்ட கிராமங்களுக்கு நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயனுள்ள வகையில் ஜூலை 11 முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கணபதிபட்டி, குன்னத்தூர், மேலவண்ணாரிருப்பு, மின்னமலைப்பட்டி, பிரான்பட்டி, வலசைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு வலசைப்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெறுகிறது.மானாமதுரை வட்டாரத்திற்குட்பட்ட சூரக்குளம், பில்லறுத்தான், கல்குறிச்சி, செய்களத்தூர், சன்னதி புதுக்குளம், மனம்பாக்கி, இடைக்காட்டூர், ஆகிய கிராமங்களுக்கு எ.வேலாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளது. முகாம்கள் காலை 10மணி முதல் பிற்பகல் 3மணி வரை நடைபெறும்.