சிவகங்கை, ஜூலை 29: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை சிவகங்கையில் குறிப்பிட்ட கிராமங்களுக்கு நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும வகையில் பயனுள்ள வகையில் ஜூலை 11 முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட இடையமேலூர், கண்டாங்கிப்பட்டி, சக்கந்தி, சாலூர் ஆகிய பகுதிகளுக்கு இடையமேலூர் சேவுகப்பெருமாள் கோவில் மண்டபத்திலும், தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளான ஆறாவயல், எழுவன்கோட்டை, கண்டதேவி, கண்ணக்கோட்டை, சண்முகநாதபுரம், தானாவயல், தென்னீர்வயல் ஆகிய பகுதிகளுக்கு கண்டதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும் நடைபெற உள்ளது.
முகாம்கள் காலை 10மணி முதல் பிற்பகல் 3மணி வரை நடைபெறும். இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.