ஜெயங்கொண்டம், நவ.18: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் ஏலவார் குழலி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர் விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை கால பைரவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று சிவனடியார்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாசகம் முற்றோதலில் திருமுதுகுன்றம் எனக் கூறப்படும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்தும் ஆண்டிமடம் மற்றும் முஷ்ணம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியானது நேற்று காலை 9 மணி முதல் மாலை வரை நடைபெற்றது திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.