விருதுநகர், ஆக.28: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பு வருமாறு: மேஜர் தயான்சந்த் பிறந்த ஆக.29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விருதுநகர் பிரிவின் சார்பில் நாளை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
காலை 9 மணிக்கு துவங்கும் போட்டிகளில் 19 வயது மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் கையுந்து விளையாட்டு போட்டிகள், 45 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் 50 மீ மற்றும் 100 மீ விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அனைவரும் பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.