ஆர்.எஸ்.மங்கலம், செப்.4: உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் விநாயகர் மற்றும் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியர்களுடன் நாளை திருக்கல்யாணம் விழா நடைபெற உள்ளதால், விழா ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினமும் மாலையில் வெள்ளி மூஷிக, கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. விழாவில் 8வது நாளான நாளை திருக்கல்யாணம் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியர்களுடன் விநாயகருக்கு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவை காண்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.