Saturday, April 20, 2024
Home » நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம்

நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம்

by Ranjith

ராமநாதபுரம். பிப். 14: ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவதற்காக, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நாளை (15.02.2024) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தின் நகலுடன் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, உரிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கடன் ஆணை வழங்கப்படும்.

முகாமில் பங்கேற்கும் மாணவர்கள், உரிய ஆவணங்கள், விண்ணப்ப நகல், மாணவர் மற்றும் பெற்றோரின் 2 புகைப்படம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று, பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டண விவரம் மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, முதல் பட்டதாரி என்றால் அதற்கான சான்று ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். மேலும், கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை கொண்டுவர வேண்டும். இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

6 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi