திருச்சி, ஆக.19: திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கழக செயற்குழு கூட்டம், அமைச்சரும் மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி மாவட்ட அவைத் தலைவர் நூர்கான் தலைமையில், மாநகர செயலாளர் மதிவாணன் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், சந்திரமோகன், பொன்செல்லையா, சரோஜினி பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், மோகன், விஜயகுமார், பாபு, ராஜ்முகம்மது, மணிவேல் மற்றும் மாநகர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்து முடிந்து நாடாளுமன்ற ேதர்தலில் நாற்பதுக்கு நாற்பது வென்ற தொடர் வெற்றி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் களங்களிலும் வாகை சூடி, தொடர் வெற்றி நாயகராகத் திகழும் தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்வது.
திமுக பவள விழா ஆண்டில் சென்னையில் எழுச்சிமிகுந்த முப்பெரும் விழா நடத்துவது, திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்த மாவட்ட செயலாளருக்கு நன்றி தெரிவிப்பது, எம்பி தேர்தலில் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுத்தந்த மாவட்ட செயலாளருக்கு பாராட்டுக்களை தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.