திருப்பூர், ஆக.21: திருப்பூர் மன்னரைப் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய வீட்டருகே பனியன் நிறுவன உரிமையாளரான சண்முகம் என்பவரது வீடு உள்ளது. சண்முகம் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது நாய் வீட்டிற்கு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை பார்த்து குறைத்தவாறு கடிக்க பாய்ந்துள்ளது.
சிறுவர்கள் அலறி அடித்து அச்சத்தில் சத்தம் போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து நாயை விரட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் சுந்தரம் மற்றும் சண்முகத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுந்தரம் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.