நாமக்கல், நவ.27: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. விவசாயிகள் 405 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹7569க்கும், மட்டரகம் ஒரு குவிண்டால் ₹4570க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹10 லட்சத்திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
0
previous post