நாமக்கல், ஆக. 30: நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1,628 வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து, புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க அறிவுறுத்தியுள்ளது.
இதையொட்டி, வாக்குச்சாவடி பட்டியல் முன்மொழிவுகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அடங்கிய ஆலோசனை கூட்டம், நேற்று c நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் 1,500 வாக்காளர்களுக்கு மேல் இல்லை. 1,628 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடிகளாக அமைந்துள்ள கட்டிடங்கள் பழுதடைந்ததன் காரணமாகவும், வேறு பயன்பாட்டிற்கு பள்ளிகளால் பயன்படுத்தப் படுவதாலும், 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்டிடம் மாற்றம், அமைவிடம் மாற்றம், பெயர் மாற்றம் மேற்கொள்வது குறித்து அரசியல் கட்சியினர், தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்,’ என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆர்டிஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி, தாசில்தார்கள், மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.