நாமக்கல், ஜூன் 11: நாமக்கல் ஒன்றியத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் சசிராணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பங்கேற்று பேசினார். எண்ணும் எழுத்தும் சார்ந்து 2025-26ம் கல்வியாண்டிற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கும், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு முதல் பருவத்திற்கான பாடப்பொருள் சார்ந்த ஒன்றிய அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இம்முகாமில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக ஆசிரியர் பயிற்றுநர்கள் கவிதா, கோமதி, ரவிக்குமார், பிரியதர்சினி மற்றும் பென்கர் தினேஷ் ஆகியோர் பயிற்சியின் நோக்கங்களை செயல்பாடுகளின் மூலம் விளக்கினர்.
நாமக்கல் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்து பயிற்சி
0