நாமக்கல், ஜூலை 4: ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை நேற்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன்படி, நாமக்கல்லில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடந்தது. நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து, மக்களுடன் ஸ்டாலின் ஆன்லைன் செயலி முலம் தன்னை திமுகவில் உறுப்பினராக புதுப்பித்து கொண்டார். அதைத்தொடர்ந்து திமுக தெற்கு நகர செயலாளர் ராணாஆனந்த் உறுப்பினராக புதுப்பித்து கொண்டார். இதைத் தொடர்ந்து திமுகவினர் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் சாதனைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தேவராஜன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மன்னன் ராஜேஸ், கவுதம், கோவிந்தராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கடல்அரசன், கார்த்தி, மன்னன் ராஜேஸ், பாக முகவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் திமுக உறுப்பினர் சேர்க்கை
0
previous post