நாமக்கல், ஆக.2: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு ஓபிஎஸ் அணியின் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பேசினர்.மாநில அமைப்பு செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், செய்தி தொடர்பாளர் கண்ணன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். அமமுக இளம்பெண்கள் பாசறை செயலாளர் மேகலா, வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு, ஓபிஎஸ் அணி நகர செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நாமக்கல்லில் ஒபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்
previous post