Wednesday, September 18, 2024
Home » நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு

நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு

by Neethimaan

நாமக்கல், ஏப்.16: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் 2023ம் ஆண்டிற்கான, ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த 3ம் தேதி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் காலியாக உள்ள 7,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வில் இந்தியா முழுவதும் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, கல்வி தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில், www.ssc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன், இண்டர்நெட்டில், ஆன்லைன் மூலமாக, வரும் மே 3ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்து, மே 4ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில், மத்திய பணியாளர் தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கான, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் வெப்சைட்டில் (TN Career Services Employment) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான வீடியோக்களை அதில் கண்டு பயன்பெறலாம். எனவே, எஸ்எஸ்சி போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு, இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்டையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

ten + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi