மதுரை, அக். 31: மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாங்குளம் கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு நாள் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சத்யா மகேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ரஹ்மத்துல்லா வரவேற்றார். ஆசிரியர்கள் தமிழ்குமரன், முகமது ரபி, தெளபிக் ராஜா, முகமது மாலிக், காதர் முகைதீன் சிறப்புரையாற்றினர்.
7 நாள் நடந்த இம்முகாமில் மாணவர்கள் கோயில், பள்ளிவாசல் சுத்தம் செய்தல், சாலை பராமரிப்பு, மரக்கன்றுகளை நடவு செய்தல், டெங்கு விழிப்புணர்வு பேரணி போன்ற நலப்பணிகளை செய்து கிராமமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திட்ட அலுவலர் செய்யது முகமது யூசுப் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஊராட்சி துணை தலைவர் அடைக்கலம், செயலர் கவுசல்யா செய்திருந்தனர்.