சென்னை, ெசப். 5: நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளான வரும் 13, 17ம் தேதிகளில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி வரும் 13ம் தேதியும், பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டி வரும் 17ம் தேதியும் கல்லூரி மாணவர்களுக்கு வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என 3 நிலைகளில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ₹5000, இரண்டாம் பரிசு ₹3000, மூன்றாம் பரிசு ₹2000 மற்றும் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள், வட சென்னை அளவில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடியிலும், மத்திய சென்னை அளவில் மாநிலக் கல்லூரி சேப்பாக்கம், தென் சென்னை அளவில் ராணி மேரி கல்லூரியில் வரும் 13ம் தேதி காலை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, காஞ்சித் தலைவன், மாபெரும் தமிழ்க்கனவு, தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள், செவ்வாழை என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறும். பெரியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள், வட சென்னை அளவில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடியிலும், மத்திய சென்னை அளவில் மாநிலக் கல்லூரி, சேப்பாக்கம், தென் சென்னை அளவில் ராணி மேரி கல்லூரியில் வரும் 17ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 வரை பகுத்தறிவுப் பகலவன், சமூக சீத்திருத்தவாதி, வைக்கம் வீரர், சுயமரியாதை இயக்கம், பெண் ஏன் அடிமையானாள் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறும். இவ்வாறு தமிழ்நாடு அரசு ெவளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.