சிவகங்கை, மே 24: நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற கண்ணுடையநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 6மணி முதல் 7 மணிக்குள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் 7ம் திருநாள் (ஜூன் 7) இரவு 6 மணிக்கு தங்கரதம், 8ம் திருநாள் (ஜூன் 8) இரவு 7 மணிக்கு வெள்ளிரதம், 9ம் திருநாள் (ஜூ ன் 9) காலை 9.30 மணி முதல் 10.25 மணிக்குள் தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. ஜூன் 10ல் பத்தாம் திருநாள் பூப்பல்லக்கு, முயல் குத்துதல் நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் திருவீதி உலா காட்சியளித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் விழாக்குழு
வினர் செய்து வருகின்றனர்.