Wednesday, February 28, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டியல் வெளியீடு காஞ்சிபுரத்தில் 13.33 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பட்டியல் வெளியீடு காஞ்சிபுரத்தில் 13.33 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்

by Karthik Yash

காஞ்சிபுரம், ஜன.23: காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ேநற்று வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளடங்கிய 4 சட்டமன்ற தொகுதிகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024-க்கான இறுதி வாக்காளர் பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளடங்கிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டன.

இப்பட்டியலின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,33,547 இதில், ஆண் வாக்காளர்கள் 6,48,934. பெண் வாக்காளர்கள் 6,84,430 இதர வாக்காளர்கள் 183. மேலும், 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்கும் வகையில் மற்றொரு புதிய வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 29. பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் புதிதாக 1 வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,394 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி 1,88,371 ஆண்கள், 1,92,842 பெண்கள், 59 இதர பிரிவினர் என மொத்தம் 38,91,272. பெரும்புதூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,82,687 ஆண்கள், 1,93,452 பெண்கள், 62 இதர பிரிவினர் என மொத்தம் 3,76,201. உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 1,28,070 ஆண்கள், 1,37,839 பெண்கள், 41 இதர பிரிவினர் என மொத்தம் 2,65,950. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,49,806 ஆண்கள், 1,60,297 பெண்கள், 21 இதர பிரிவினர் என மொத்தம் 3,10,124 என்று 4 சட்டமன்ற தொகுதிகளில் 6,48,934 ஆண்கள், 6,84,430 பெண்கள், 183 இதர பிரிவினர் என மொத்தம் 13,33,547 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வட்டாட்சியர் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இந்த, வாக்காளர் பட்டியலை அலுவலக நேரங்களில் பொதுமக்கள் நேரடியாக பார்வையிடலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். நிகழ்வின்போது, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா, தேர்தல் அலுவலர் புண்ணியகோடி, தாசில்தார் புவனேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். திமுக சார்பில் மாநகர துணை செயலாளர் ஜெகநாதன், பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, அரவிந்த்குமார், சிவா, சுப்பராயன், ஜாபர், அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், பிரகாஷ், திலக் குமார், தேமுதிக சார்பில் ஏகாம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், நேரு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி பெற்று கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் மற்றும் மதுராந்தகம் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 6,60,419 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியல் விவரங்களை கலெக்டர், வருவாய் அலுவலர் மற்றும் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில்
உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர்கள் விவரம்
சோழிங்கநல்லூர் தொகுதி
ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம்
3,30,522 3,29,783 114 6,60,419
பல்லாவரம் தொகுதி
2,12,246 2,14,801 44 4,27,091
தாம்பரம் தொகுதி
1,95,866 1,98,866 66 3,94,798
செங்கல்பட்டு தொகுதி
2,03,837 2,11,209 63 4,15,109
திருப்போரூர் தொகுதி
1,46,163 1,51,318 51 2,97,532
செய்யூர் (தனி) தொகுதி்
1,08,555 1,12,075 26 2,20,656
மதுராந்தகம் (தனி) தொகுதி
1,09,585 1,13,898 92 2,23,575

You may also like

Leave a Comment

6 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi