பல்லடம்,ஆக.24: பல்லடம் அருகேயுள்ள நாச்சிபாளையம் மற்றும் கண்டியன்கோவில் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.குமார் வழங்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டி.கோபால் (கண்டியன்கோவில்), பங்கஜம் விஜயரத்தினகுமார் (நாச்சிபாளையம்), ரவிச்சந்திரன் (பெருந்தொழுவு), பிரியா நடராஜன் (தொங்குட்டிபாளையம்),
ஒன்றிய கவுன்சிலர்கள் துளசிமணி சண்முகம், லோகுபிரசாத், பொங்கலூர் கிழக்கு ஒன்றிய திமுக முன்னாள் பொறுப்பாளர் ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, திமுக இளைஞரணி நிர்வாகிகள் கெளரிசங்கர், ஜீவானந்தம் மற்றும் அரசின் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து 550 மனுக்கள் பெறப்பட்டது.