மருத்துவ பரிசோதனை முகாம் நாசரேத்.பிப்.26: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் ஹெல்த் கேர் கிளப் சார்பில் இளையோர் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். திருச்செந்தூர் கிருபா அக்கு பஞ்சர் மற்றும் பயிற்சி மையத்தைச்சார்ந்த ஜேஸ்லின் தேவநேசம், கிருத்திகா ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி, ஆரோக்கியமான வாழ்வினை குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினர். இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை மேரி ஸ்டெல்லா, அமைப்பாளர்கள் கோயில் ராஜ் சாத்ராக், ஜெனிட்டா ஆரோக்கிய சலாயேட் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில்
0
previous post