நாசரேத், ஜூன் 12: நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர், கணித ஆசிரியர் ஜெயக்குமார் டேவிட் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். நாசரேத் எஸ்ஐ சத்யமூர்த்தி, ஏட்டு உமா ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்று நட்டனர். இதையடுத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் என்சிசி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மரக்கன்று நடுவது, மரம் வளர்ப்பது மற்றும் மரங்களை பராமரிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து என்சிசி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர், ஜூனியர் கமிஷன் அதிகாரி சுந்தரபாண்டியன், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், உடற்கல்வி ஆசிரியர் தனபால் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
நாசரேத் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
0