நாசரேத், ஜூலை 18: நாசரேத் நூலக வாசகர் வட்டத்தில் சிறப்பு கவியரங்க நிகழ்ச்சி நடந்தது. நூலக வாசகர் வட்டத்தலைவர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். கவிதையின் சிறப்பு குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் காசிராஜன் உரையாற்றினார். எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள் கவிஞர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். நிகழ்ச்சியில் மணிமொழிச்செல்வன், ஆத்தூர் சாகுல், மூக்குப்பீறி தேவதாசன் ஞான்ராஜ், சுப்பிரமணிய சிவா, பகவதிப்பாண்டியன், கவிதாயினி ராஜி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தனர். கவிதைகளின் சமூகத் தாக்கம் பற்றி வாசகர் வட்டத் துணைத்தலைவர் கொம்பையா எடுத்துரைத்தார். முன்னாள் வாசகர் வட்ட தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
நாசரேத் நூலகத்தில் கவியரங்க நிகழ்ச்சி
49
previous post