நாசரேத், பிப். 19:நாசரேத் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜீன்குமார், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி அரண்மனை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கங்கைநாத பாண்டியன், நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார். புதிய இன்ஸ்பெக்டரை சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் மற்றும் போலீசார் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாசரேத், செய்துங்கநல்லூரில் இன்ஸ்பெக்டராக பணி மாற்றம்
0