நாசரேத், மே 31: நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் 22வது விளையாட்டு விழா நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளிகளின் தாளாளர் ரமா தலைமை வகித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
கல்லூரி 3ம் ஆண்டு மாணவ- மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்ைத பெற்றனர். நிகழ்ச்சியை பேராசிரியர் ஸ்டான்லி ஜாண்சன் தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜாண் சந்தோஷம், முதல்வர் ஜெயக்குமார், உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.