நாசரேத், ஆக. 30: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் புனித லூக்கா மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளரும், கல்லூரி செயலாளருமான பிரேம்குமார் ராஜாசிங் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜீவி எஸ்தர் ரெத்தினகுமாரி வரவேற்றார். முகாமில் 54 மாணவ -மாணவிகள் ரத்த தானம் செய்தனர். இதில் கல்லூரி நிதியாளர் சுரேஷ் ஆபிரகாம், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ராஜாசிங் ஹேரிஸ்டன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜாசிங் தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சாந்திசலோமி, சீயோன்செல்லரூத், பியூலா ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.