நெல்லை, ஆக.21:நாங்குநேரி தொகுதி முழுவதும் ராஜிவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மகாராஜநகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில், ராஜிவ்காந்தி படத்திற்கு ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் எம்எல்ஏ தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச்செயலாளர் ஒபேத், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் குளோரிந்தாள், ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து பாளை முருகன்குறிச்சி பிஷப் சார்ஜென்ட் அன்பில் இல்ல குழந்தைகளுக்கு ரூபி மனோகரன் எம்எல்ஏ புத்தாடைகள் வழங்கினார். மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் எம்எல்ஏ முன்னிலையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல் நாங்குநேரி தொகுதி முழுவதும் காங்கிரசார் ராஜிவ்காந்தி பிறந்த நாளை கொண்டாடினர்.
நாங்குநேரி தொகுதியில் ராஜிவ்காந்தி பிறந்தநாள் விழா
previous post