நாங்குநேரி, ஆக.22: நாங்குநேரி அருகே குசவன்குளம், மேற்கு தெருவைச் சேர்ந்த தொழிலாளி முத்துக்குட்டி (40). இவரது மனைவி சாந்தி (38). இவர், தனது கணவர் முத்துக்குட்டிக்கும் இன்ெனாரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து கணவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குட்டி அருகில் கிடந்த ‘பிளாஸ்டிக்’ நாற்காலியால் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கணவன், மனைவியை சமாதானப்படுத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் சாந்திக்கு முதுகு, தோல்பட்டையில் அடிபட்டதில் ரத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறுத்து சாந்தி அளித்த புகாரின் அடிப்படையில் நாங்குநேரி போலீசார் முத்துக்குட்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.