நெல்லை, ஆக. 13: நாங்குநேரி அருகே இன்று நடக்கும் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் பேசுகிறார். திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்தி்ட்ட உதவிகள் வழங்குதல் நாங்குநேரி அருகே மன்னார்புரம் விலக்கு கலைஞர் திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணு தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், தலைமை பேச்சாளர் உடன்குடி தனபால், முன்னாள் எம்பி ஞானதிரவியம், மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் நம்பி, மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
நாங்குநேரி அருகே இன்று 3 ஆண்டு சாதனை விளக்க திமுக பொதுக்கூட்டம்
previous post