வேதாரண்யம், மே 27: நாகை மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் வருகிற 29ஆம் தேதி வரைமீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கொங்கன் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா, கொமோரின் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும் இதனால் நாட்டுப் படகு மீனவர்கள் வருகிற 29ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.