நாகப்பட்டினம்,செப்.3: நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க நாளை (4ம் தேதி)க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் பிரத்யேகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. மேலும் தொழில் பயிற்சிகள் நடத்தி வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து வரும் 6ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெறுகிறது.
மத்திய பேருந்து நிலையம் அருகில் மெக்டொனால்டு ரோடு என்ற முகவரியிலுள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெறவுள்ளது. எனவே வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள், நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவே அல்லது தபால் மூலமாகவோ தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். நேரடியாக வர முடியாதவர்கள் ddawongp@gmail.com மூலமாகவோ தங்களது சுய விவரம் மற்றும் கல்வி தகுதி குறித்த விவரங்களை நாளை(4ம் தேதி) மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.