நாகப்பட்டினம்,ஆக.26: நாகப்பட்டினம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் பேச்சு போட்டி நாகப்பட்டினத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திக் வரவேற்றார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் இளையராஜா தலைமை வகித்தார். திமுக மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 180க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் 10 தலைப்புகளில் பேசினர். நடுவர்களாக கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதிமோகன், மதிவதனி, பன்னீர்பெருமாள் செயல்பட்டனர். திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலையரசன்,சுரேஷ் தாமோதரன்,பன்னீர் செல்வம், டேனியல் சத்யா, நாகப்பட்டினம் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.