திருவாரூர், அக். 6: நாகை நாடாளுமன்ற தொகுதியில் கட்சியின் தலைமை மூலம் அறிவிக்கப்படும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என திருவாரூர் ஒன்றிய முகவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் ஒன்றிய திமுக சார்பில் அவை தலைவர் செல்வராஜ் முன்னிலையிலும், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவான பூண்டி கலைவாணன் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் புலிவலத்தில் இருந்து வரும் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது.
ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு பெருந்தலைவருமான புலிவலம் தேவா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கருணாகரன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் வரும் நாடாளுமன்ற தேர்தலைமுன்னிட்டு அடுத்த மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளிலும், 18 மற்றும் 19ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பி எல் ஏ சி என 100 வாக்காளர்களுக்கு ஒரு நபர் என பிரித்து அந்தந்த பாக எண்ணில் கூட்டத்தை நடத்தி கருத்து வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாக்காளர்களை சந்திப்பது,மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் தலைமை கழகம் மூலம் அறிவிக்கப்படுகின்ற வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வதற்கு எப்போதும் போல் திருவாரூர் ஒன்றியத்தில் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுப்பது மற்றும் கூட்டுறவு சங்க தேர்தலிலும் கழகம் மூலம் அறிவிக்கப்படுகின்ற வேட்பாளர்களின் வெற்றிக்கு பணி செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.