நாகப்பட்டினம், மே 27: வீட்டிற்கு செல்லும் இடத்திற்கு பாதை கேட்டு, பாதிக்கப்ப ட்ட குடும்பத்தினர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருங்கண்ணி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் ரோஸ்லின், அருள்மேரி, பிரிமிலா, ராபர்ட், மிஸ்டிக்கா, மிஸ்பாமேக்தலின், விமலா, உள்ளிட்ட 5 குடும்பத்தினர் நேற்று நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.அவர்கள் அனைவரும் திடீர் என கலெக்டர் அலுவலகம் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: தங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையை வேலி வைத்து அடைத்து விட்டதால், ஐந்து குடும்பத்தினர் பாதை இல்லாமல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கூறினர்.